search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் நிலநடுக்கம்"

    ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை. #Earthquake
    டோக்கியோ:

    ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    மியாசகியை  மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன. #Earthquake
    ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. #Miyazakiquake
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக இன்று காலை சுமார் 9 மனியளவில் மியாசாக்கி, எஹைம், கோச்சி, குமாமொட்டோ, ஓய்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் 3 முதல் 4 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Miyazakiquake  
    ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #japanearthquake

    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

    இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிறிய அளவில் அவை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.  #japanearthquake

    ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. #JapanEarthquake
    டோக்கியோ:

    உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.



    இந்நிலையில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவின் ராவுசு பகுதியில் இருந்து 60 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    முன்னதாக கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜாகின்தோஸ் தீவில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இயோனியன் கடற்பகுதியில் உள்ள இந்த தீவின் தென்மேற்கில் பூமிக்கடியில் 35.9 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.  #JapanEarthquake

    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவை கடந்த வாரம் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 44 ஆக அதிகரித்துள்ளது. #Japanquake #Hokkaidoquake
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டை கடந்த 4-ந் தேதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.

    மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  

    தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


    இந்நிலையில், இன்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 44  ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அப்பகுதியில் மின்சார வினியோகம் இன்னும் சீரடையாததால் அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake
    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்துள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
     
    பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.



    மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

    தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 15 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பலர் அட்சுமா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake
    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதையுண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 16 ஆக அதிகரித்தது. #Japanquake #Hokkaidoquake
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.



    அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    விமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Japanquake  #Hokkaidoquake

    ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். #JapanEarthquake #EarthquakeOsaka
    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.

    இந்த கடுமையான நிலநடுக்கத்திற்கு  குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தின்போது பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் ஒருவரும், வீட்டிலுள்ள புத்தக அலமாரியில் சிக்கி ஒருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.



    மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரெயில் சேவைகள் தடைப்பட்டன. தொழிற்சாலை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பலர் நகரும் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சாலைகளின் கீழே செல்லும் தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. #JapanEarthquake #EarthquakeOsaka

    ×